Valmiki Ramayanam For Kids

Latest release: August 13, 2024
Religious
Series
7
Audiobooks

About this audiobook series

குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் என்கிற எனது முயற்சியிலே ஒரு அடுத்த முக்கியமான கட்டமாய், நான் வால்மீகி ராமாயணத்தை ஒரு தொடர்கதையா சொல்லணும் என்கிற முயற்சி வெற்றிகரமா ஒலிபரப்பாகி நிறைவு அடையறதுக்கு வழக்கம்போல உங்க எல்லோருடைய ஆதரவையும், ஆசிகளையும் வேண்டிக் கேட்டுக்கிறேன்.

இந்தப் பகுதி நூல் அறிமுகத்துடனும், கொள்ளைக்காரனாய் இருந்த ரத்னாகரன் வால்மீகி முனிவராய் உருவான கதையுடனும் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் பால காண்டத்தில் வால்மீகி ராமாயணம் உருவான கதையில் ஆரம்பித்து, தசரதர் அச்வ மேத யாகம் செய்ததன் மூலம் ஸ்ரீ ராமரும், அவரது சகோதரர்களும் பிறந்தது, விசுவாமித்திர முனிவர் பால ராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்தது, லக்ஷ்மணன் உடன் வர, அவருடன் வனம் சென்ற ராமன் தாடகையை வதம் செய்தது, விசுவாமித்திரரின் யாகம் காத்தது எல்லாம் சொல்லப்படுகிறது; பின் கங்கை பூமிக்கு வந்த கதை, தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த கதை, அஹல்யை சாபம் பெற்ற கதை, ராமனின் பாதம் பட்டு அவள் சாப விமோசனம் பெற்றது, ராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரருடன் மிதிலை சென்றது, அங்கே அவர்கள் விசுவாமித்திரரின் சரித்திரத்தைக் கேட்டறிந்தது, ராமன் சிவ தனுஸை ஒடித்து சீதையை மணந்தது, பின் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரசுராமரை வென்றது, அயோத்தியில் ராமனும் சீதையும் மகிழ்ச்சியான மணவாழ்வைத் தொடங்கியது – ஆகியவரை பால காண்டத்தில் சொல்லப்படுகின்றன.