சுந்தர காண்டத்தில், ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பாய்ந்து செல்வது, அங்கே சென்று சீதையைத் தேடுவது, அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதையை சந்தித்து ஆறுதல் தருவது, அசோக வனத்தை அழித்து, ராட்சசர்களைக் கதிகலங்க அடிப்பது, ராவணனைச் சந்தித்துப் பின் தப்புவது, இலங்கையைத் தீக்கிரையாக்கிய பின் அனுமார் கிஷ்கிந்தை திரும்பி ராமரிடம் சேதியை சொல்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.