நீர் இல்லாமல் இவ்வுலகில் எதுவும் இல்லை. இதையே வள்ளுவர் 'நீரின்றி அமையாது உலகு' என்று குறிப்பிடுகிறார். இதேபோல் அங்கநாட்டில் மழை பெய்யாமல் அந்த நாடு முழுவதுமே இயற்கைவளம் குன்றி வறண்ட பூமியாக காணப்படுகிறது. மன்னனான ரோமபாதனுக்கு மட்டும் ஏன் தன் அங்கதேசத்தில் இவ்வளவு சிக்கல்கள்? அங்கதேசம் வறண்ட பூமியாக தோன்றக் காரணம் என்ன? இதில் வைசாலி என்பவள் யார்? வைசாலி எதற்காக பாணவனத்திற்கு செல்கிறாள்? ரிஷ்யசிருங்கன் எதற்காக அங்கநாட்டிற்கு வருகிறான்? ரிஷ்யசிருங்கனின் மனதை ஆக்கிரமிக்கும் அந்த முதல்பெண் யார்? வறண்ட தேசத்தில் மழை பெய்யுமா? பத்தினியாய் வாழ்ந்தாலும், வாழ நினைத்தாலும் தாசிப்பெண்களுக்கு கடைசிவரை 'தாசி' என்ற பெயர்தான் விதியோ? இவர்களுடன் நாமும் முதல் மழையில் நனைவோம்...