சூர்யாவும் அரவிந்தனும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். உறவுப் பெண்ணையே காதலிக்கும் அரவிந்தனுக்கு அவன் விருப்பப்படி திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் திருமணத்தன்று வரவேண்டிய அரவிந்தன் வராமல் போக, வேறு ஒருவருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுக்க அவளது தந்தை முடிவெடுக்க, நண்பனின் காதலியை அத்திருமணத்திலிருந்து காப்பாற்ற வேறு வழி தெரியாத சூர்யா யாரும் எதிர்பாராத நிலையில் மணப்பெண்ணின் கழுத்தில் தாலியை எடுத்து கட்டிவிடுகிறான். ஆனால் அத்திருமணம் அவளைக் காக்கத்தான் என்று மற்றவர்களுக்கு விளக்கும் அவன், அவளை அரவிந்தனிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கூறுகிறான். அரவிந்தனுக்கு என்னாயிற்று, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை விவரிக்கும் புதினம்தான் கோபுரக்கலசங்கள்