போதை மருந்துக்கு அடிமை ஆகும் கதை தான் அவன். போதை மருந்துக்கு அடிமையாக வயசோ அந்தஸ்தோ எதுவுமே காரணம் இல்லை. சூழ்நிலை தான் காரணம். இந்த கதையிலே கல்லூரியில் படிக்கும் நாலு மாணவர்கள், நண்பர்கள் தான் கதாநாயகர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாக்ரௌண்டு.ஒருத்தன் ரொம்ப பெரிய பணக்காரன்.கவனிக்க யாருமில்லை பணமிருக்கிறது. அதனால் ட்ரக் ஹாபிட் வருகிறது. இன்னோருவனுக்கு எல்லாம் அழகான குடும்பம் இருந்தும் கூட அக்காவோட ஒப்பிட்டு ஒப்பிட்டு பேசுவதிலே அது அவனை காயப்படுத்துவது புரியாமல் இருப்பதில் அவன் போதை மருந்திற்கு ஆளாகிறான். இன்னோருத்தனுக்கு சின்ன வயசுலேந்து அப்பா இல்லாத குடும்பம்.கனவுகளோடு வளர்கிறான், அவன் மீது தான் குடும்ப பொறுப்பு பூரா இருக்கிறது. அதனால் அந்த காம்ப்ளக்ஸில் அவன் பழகி கொள்ளுகிறான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது .நான்கு பேருமே தங்கள் அறியாமையால் தான் முதலில் சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சாவிற்கு போய் பிறகு ஹார்ட் கோர் ட்ரக்ஸ் என்று சொல்லக்கூடிய அதிலே வாழ்வார்கள். ஆக ட்ரக் அடிக்ஷன் என்பது எவ்வளவு ஒரு பயங்கரமான பழக்கம், அது இறுதியில் என்ன என்ன வழி செய்கிறது என்பதை கூட இந்த புத்தகம் விவரிக்கிறது.