பாரதி ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பேமிலியை சார்ந்தவள். கணவனுக்கு வைட் காலர் ஜாப். இவளுக்கு நாற்பத்தி இரண்டு வயசாகிறது. நல்ல வசதியான வாழ்க்கை. இரண்டு பிள்ளைகள் இரண்டு பேரும் ஐ ஐ டி அங்கு இங்கு என்று படிக்க ஆஸ்டலுக்கு போன பிறகு திடீரென ஒரு வெறுமை அவளுக்கு வருகிறது. அந்த வெறுமையை பயன்படுத்தி கொள்ள அவள் தான் சின்ன வயசில் ஆசைப்பட்ட பரதநாட்டியத்தை கற்றுக்கொள்ளலாம், தியோரடிகல் கிளாஸ் போகலாம் என்று கலாக்ஷேத்ராவில் போய் ஏற்பாடெல்லாம் செய்கிறாள். அவள் கணவனுக்கு இந்த முடிவு மிகவும் அதிர்ச்சிசை தருகிறது. என்ன இந்த வயசில் போய் டான்சா என்று அவன் அதிர்ந்து போகிறான். மாமூலாக எல்லா கணவனும் சொல்வதுபோல டைப்ரைட்டிங் போ, கம்ப்யூட்டர் போ, குக்கரி கிளாஸ் போ இப்படி எல்லாம் சொல்கிறானே தவிர அவனோ அல்லது இரண்டு பிள்ளைகளோ, அவளது பெற்றோரோ யாருமே அவளுடைய மனநிலைமையை புரிந்து கொள்வதில்லை.இந்த குடும்பத்துக்காக இத்தனை வருஷமாக நான் உழைத்திருக்கிறேன். இப்போது எனக்கு கிடைத்திருக்கும் ஒய்வு நேரத்தில் என்னுடைய ஐடென்டிட்டி, எனக்கு என்ன வேணுமோ நான் செய்ய விரும்புகிறேன் அதை என் குடும்பம் புரிந்துகொள்ளவில்லையே என ரொம்ப வருத்தப்படுகிறாள் ஆனால் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறாள். பாரதியின் ஆசை நிறைவேறுகிறதா? அறிய கேளுங்கள் நான் நானாக.