பெற்றோர்களை ஒரு சேர ஒரு விபத்தில் பறி கொடுத்துவிட்டு, நிராதரவாக இருக்கும் தன் தம்பிப் பெண் அருணாவை, பெரியப்பா தாமோதரன் வளர்க்க ஆரம்பிக்கும்போது அவளுக்கு வயது 5 வயது இருக்கும். தம்பியின் ஆசைப்படியே அருணாவை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். அருணாவின் பெற்றோர்களின் லட்ச, லட்சமான பணத்தை அவள் பெயரில் போட்டு, தன்னை கார்டியனாக நியமித்துக் கொள்கிறார். இதனால் வீட்டில் யுத்தம் ஆரம்பிக்கிறது. அருணாவின் காலேஜ் சீனியரான அசோக் அருணாவை கல்யாணம் செய்துக்க ஆசைபடுகிறான். தான் நர்ஸிங் ஹோம் கட்ட அருணாவின் பணத்தை எதிர்பார்க்க, அருணா அதை விரும்பவில்லை, கல்யாணத்திற்கு முன்னாடியே பணத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறான் என்று நினைக்கிறாள். அருணாவின் வாழ்க்கை அமைகிறது என்பதை அறிய கேளுங்கள் உன்னிடம் மயங்குகிறேன்.