மனதின் சமன் குலைந்த நிலையை சீர்படுத்தும் எத்தனமே எழுத்து என்கிறார் ஜெயமோகன்.
அவ்வகையில் , இக்கதையில் வரும் எழுத்தாளருக்கு, இரு தலைமுறைகளாக விளக்க முடியாத குடும்பச்சூழலே தன் மனதின் சமநிலையை சீர்குலைக்கவும் செய்து தன் எழுத்துக்கு தூண்டுகோலாகவும் அமைவதைக் குறித்து தன் நண்பரிடம் மனம் திறந்து அளவளாவுகிறார். செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதன் பின் உள்ள அறம் என்ன? அது யாருக்காக? கேளுங்கள் தாயார் பாதம்.