குடி என்பது ஒரு குடும்பத்தை கெடுக்கும் நோய் என்பதால், 'It is a Family Disease' என்று சொல்வார்கள். தியாகு என்ற மிக நல்ல மனிதன், சிறு பிராயத்தில் அம்மாவை இழந்து அப்பாவாலும் கொடுமைக்கார சித்தியாலும் வளர்க்கப்படுபவனுக்கு அவன் எதிர்பார்பவை எதுவுமே நடக்காததில் குடிக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்து, ஒரு குடி நோயாளியாக ஆகிறான். எப்படி அவன் குடி நோய் அவனுடைய குடும்பத்தை, அவனுடைய வேலையை, அவனுடைய மானம் மரியாதை எல்லாவற்றையும் இறுதியில் கபளீகரம் செய்கிறது என்றும், பின்பு டாக்டர் ரெட்டியின் உதவியுடனும் ஆல்க்கஹாலிக் அனானிமஸ் உதவியோடும் அவன் மீண்டு வந்து புது வாழ்வு தொடங்குகிறான் என்பது தான் கதை.