பேரழகன் அர்ஜுன், நல்லவன். அவன் கோடீஸ்வரன் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவரது மகள் மாயா, அர்ஜுனை காதலிக்க, கோடீஸ்வரனால் மீட்கப்படும் அஜிதா, அவருக்கு அடைக்கலமாக இங்கே வந்து மாயாவுடன் நெருங்கி பழகி, ஒரு கட்டத்தில் கோடீஸ்வரனை மணந்து மாயாவுக்கு சித்தி ஆகிறாள். ஆனால் வயதான அவருடன் வாழ பிடிக்கவில்லை! வாலிப அர்ஜுன் மேல் கண் வைக்கிறாள். அவனை அடைய துடிக்கிறாள். அது தவறு என அர்ஜுன் அவள் தோலை உரிக்க, அவன் மேல் பழி சுமத்தி அவனை தூக்கு மேடை வரை கொண்டு போகிறாள். தன் மேலுள்ள பழிகளை துடைத்து எப்படி அர்ஜுன் மீண்டான் என்பதை சொல்லும் சோஷியோ..க்ரைம் கதை இது.
Ilukirjandus ja kirjandus