ரங்கநாயகியின் கடைசி மச்சினர் கிச்சாமி, ரங்கநாயகிக்கு மகனை போல. அவரது மகளுக்கு அவர் மன்னியின் நினைவாக ரங்க நாயகி என பெயர் சூட்டி, அவளை ஆளாக்குகிறார். ரங்கநாயகியின் முதலாளி, டேவிட் ஆசிர்வாதம், ஒரு ஆஸ்பத்திரியை கட்டி வைத்திருக்க, டாக்டருக்கு படித்து விட்டு வரும் ரங்கநாயகி 2.0. ஒரு மிகப்பெரிய மருத்துவமனை நடத்தும் மெடிக்கல் ஊழல்களை தோலுரிக்க புறப்படுகிறாள். இதில் அவளுக்கு பல எதிரிகள் முளைக்க, அவளது உயிருக்கு உலை வைக்க புறப்பட, சகலமும் கடந்து நோயாளிகளை மீட்டு எப்படி சாதித்தாள் என்பது கதை. இது மெடி க்ரைம் கதை.