துர்கா என்ற வேலை பார்க்கும் படித்த அழகான பெண். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டையும் ஆதரிக்க வேண்டிய நிலை. ஆனால் மாமியார் சரியில்லை. தன் பிள்ளை மனதை கலைத்து விடுகிறாள். பிறந்த வீட்டில் வேறு விதமான பிரஷர். உத்யோகத்தில் பிரச்னை. சமூகத்தில் போராட்டம். எதற்கும் கலங்காமல், தான் எடுத்துக்கொண்ட கடமைகளில் கொஞ்சமும் சளைக்காமல் போராடி எப்படி வென்றாள் துர்கா என்பதுதான் கதை.