இந்த நூலுக்கு உரை எழுதிய நச்சினார்கினியர் கூறும் உரையை ஆதாரமாகக் காட்டி ஆரிய மன்னன் பிரகதத்தனுக்கு தமிழ் மொழியைப் பற்றி அதன் சிறப்பைப் பற்றி அறிவிப்பதாக இந்த நூல் இயற்றப்பட்டது என்று கூறுவர்.
இந்த நூல் 261 அடிகளைக் கொண்டது. காதலர்களின் களவு ஒழுக்கத்தை சிறப்பித்து கூறக் கூடியது இந்த நூல். இந்த நூலில் காந்தள் பூ முதல் எருக்கப் பூ வரையிலுள்ள 109 மலர்களை இந்த நூலில் இவர் குறிப்பிடுகிறார்.
குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கத்தை அழகு பட அமைத்துக் காட்டுவதில் இந்த நூலுக்கு இணையான நூல் இதுதான் என்று கூறப்படுகிறது.