தமிழ் சான்றோர்கள் பாடிய இந்த புறநானூறு இலக்கியம் தமிழர்களுடைய வரலாறையும் பண்பாடையும் அறிய வழிகாட்டுகிறது. இந்த நூல் ஒரு அறிவு சுரங்கமாக விளங்கி நம்முடைய வீரமிக்க வரலாறையும் வாழ்வியலையும் விளக்கக் கூடியதாக உள்ளது.
அகம் என்றால் ஒருவர் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகள், காதல் போன்ற தனிப்பட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியது. ஆனால் புறம் என்பது காலத்தை வாழ்வியலை வரலாற்றை, சமூக சூழ்நிலையை பிரதிபலிக்கக் கூடியது. பழங்காலத் தமிழர்களின் வீரமும் கொடையும் பற்றி அறிந்து கொள்ள புறநானூறு பேருதவியாக இருக்கும் என்று கருதுகின்றேன்.