கந்துவட்டிக்காரனின் மறு உருவம்! மார்வாடியின் அவதாரம்! நம்மை கடனாலியாக்கி பணக்காரர்களாவது தான் அவர்களின் வியாபார தந்திரம். அழகான பெண் குரல் மூலம் நம்மை தொடர்பு கொள்வார்கள். பணம் தர மறுத்தால் வீட்டுக்கு குண்டர்களை அனுப்புவார்கள்.
ஏமாந்தவர்கள் தான் அவர்களின் வாடிக்கையாளர். வக்கீல், போலீஸ் வாடிக்கையாளர்கள் பட்டியலில் வர மாட்டார்கள். இவர்களே கிரடிட் கார்ட் வேண்டும் என்று கேட்டாலும் கிடைக்காது.
அதிகமாக வட்டி வாங்க கூடாது என்று நீதி மன்ற தீர்ப்பை இவர்கள் மதிப்பதில்லை. மாதம் 3% வட்டி வாங்குகிறார்கள்.
அட்டை பூச்சிப் போல் எத்தனை பேர் பணத்தை இரத்தம் போல் உறிஞ்சியிருப்பார்கள்.
ஒருவனின் கையெழுத்தை வைத்து அவன் தலையெ௯ழுத்தை மாற்றியிருக்கிறார்கள். கையெழுத்து மாற்றி எழுதியவர்களை கண்டு பிடிக்காமல் ஏமாந்தும் இருக்கிறார்கள்.
அவர்களின் நிபந்தனைக்கு ஏற்ப கிரடிட் கார்ட் பயன்படுத்தினால் பல சலுகைகள் கிடைக்கும். சொர்க்கம் கூட கண்ணில் தெரியும். நிபந்தனை மிறி நடந்தால் கடன் அட்டையை எமலோகத்தின் நுழைவு அட்டையாக மாறிவிடும்.
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்.... கிரடிட் கார்ட் அலாவுதீன் கையில் இருக்கும் அற்புத விளக்கு... தேய்க்க தேய்க்க பூதமும் வரும்… பூகம்பமும் வரும்!!
அற்புத பூதம், பூகம்பம் இரண்டையும் தெரிந்துக் கொள்வோம். உள்ளே வாருங்கள்!!!