தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்களில் சிறப்பு மிக்கவராக கருதப்படக் கூடியவர் நச்சினாகினியர். அவர் இந்த நூலில் உள்ள பாடல்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்த நூலை இயற்றிய ஆசிரியர் கண்ணஞ் சேந்தனார் என்பவர் ஆவார். இவர் சாத் தந்தையாரின் மகன் என்றும் சிலர் கூறுவார்கள். ஒரு சிலர் கார் நாற்பது எழுதிய மதுரையைச் சேர்ந்த கண்ணன் கூத்தனாரின் உடன்பிறந்த சகோதரர் என்றும் கூறுவர். இவர் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அகப் பொருள் விளக்கும் நூல்களில் ஒன்றாக திணைமொழி ஐம்பது விளங்குகிறது. இந்த நூலில் ஒரு திணைக்கு 10 பாடல் வீதம் 5 திணைகளுக்கும் சேர்த்து மொத்தம் 50 பாடல்களைக் கொண்டது.
திணைமொழி ஐம்பது என்ற பெயர் ஐந்து திணைகளுக்கும் சேர்ந்து ஐம்பது பாடல்களைக் கொண்டதால் இந்தப் பெயர் வந்தது. அனைத்து பாக்களும் வெண்பாக்களால் ஆனது.
தமிழர்களின் காதல்நெறியையும் கற்பின் நெறியையும் அறிந்து கொள்ளவும் கருத்து சுவை பெறவும் இந்த நூல் பெரிதும் உதவும்.