"பெண் எழுத்தாளர் தீர்க்காவும், அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் வசந்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல்கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், புலனாய்வில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாற வரவும் இருவரும் அதிர்கிறார்கள். ஒரு கட்டத்தில் இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது.அது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கிராமம் போல் தோன்றினாலும் அங்கே அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடப்பதை கண்கூடாய் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்த கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் புலனாய்வை மேற்கொள்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா? இன்னும் தேவதையைப் பற்றி அறிய கேளுங்கள். இது ஒரு அமானுஷ்யமும், விஞ்ஞானமும் கலந்த ஒரு அதிநூதனமான த்ரில்லர்."