புனலும் மணலும் ஆ. மாதவன் எழுதிய முதல் தமிழ் நாவல். இந்நாவல் திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மணல் அள்ளி வாழும் மக்களைப்பற்றிய கதை. பாச்சி என்ற மையக்கதாபாத்திரம் அழகற்ற குரூபி. அவளை அவள் தந்தை வெறுக்கிறார். அவள் அவரை நேசித்து பாதுகாத்து வந்தபோதிலும்கூட வெறுப்பு கூடிக்கூடி வருகிறது. காரணம் என்ன? அவளுக்கு முடிவில் என்ன நேர்கிறது? வாழ்க்கையை உள்ளபடியே சொல்ல முயலும் இயல்புவாத அழகியல் கொண்ட நாவல். காமத்தையும் வன்முறையையும் அப்படியே சொல்கிறது. நீதி ஒழுக்கம் என எதையும் முன்வைப்பதில்லை. கேளுங்கள் புனலும் மணலும்.
Ilukirjandus ja kirjandus