இந்த நாவல் அனுபவங்களின் அப்பட்டமான உணர்வுகளின் ஆதாரத்தில் எழுதப்பட்டது. ஆனால் கற்பனைதான் என்கிறார் பா. விசாலம் தன் முன்னுரையில். குழந்தைப் பருவத்திலிருந்து இயக்கத் தோழரையே மணப்பதுவரை போகும் கதையைப் படிக்கும்போது அதிலுள்ள விசாலத்தின் ஆழமான உணர்வுகள் மற்றும் சொந்த அனுபவங்களின் கனத்தை அறிந்துகொள்ள முடிகிறது. பெயரில்லா இந்தக் கதையின் நாயகியை நான் விசாலம் என்றே படித்தேன். அந்த அன்னம் வானில் பறப்பதையும் அது தாமரைக்குளத்தில் இறங்குவதையும் உணர முடிகிறது. அத்துடன் அதன் சோர்வையும் தனிமையையும்கூட. கேளுங்கள் மெல்லக் கனவாய் பழங்கதையாய்