வெங்கட், மைதிலி இருவரும் சில வருஷங்களுக்கு முன்னால் அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே செட்டில் ஆகி சிடிஸின் ஆனவர்கள். அவர்கள் இந்தியா வில் பிறந்து வளர்ந்து பின்னர் அமெரிக்காவிற்கு சென்றவர்கள். அவர்களுடைய குழந்தைகள் அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்கிறார்கள். பெண்ணுக்கு பதிமூன்று பதினான்கு வயசாகி அவள் பெரியவளாகும்போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. சுற்றிலும் உள்ள அமெரிக்கா குழந்தைகள் போல அவர்களுடைய பெண்ணும் டேட்டிங், பாய் ப்ரெண்ட் என்று பழக்கத்தை ஆரம்பிக்கும் போது இவர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை. என்ன செய்தாலும் நம்ம கலாச்சாரப்படி அங்கே வளர்க்க முடியாது என்ற எண்ணம் தோன்ற இந்தியாவிற்கு திரும்பி விடலாம் என்று தீர்மானித்து விடுகிறார்கள். அப்படி முடிவெடுத்த ஒரு நாளில் தான் அவர்களுக்கு ஒரு ஞானோதயம் கிடைக்கிறது. ஒரு நண்பர் மூலமாக அந்த ஞானோதயம் வருகிறது. அவர்கள் இந்தியாவில் பிறந்து வளர்ந்து இருக்கிறார்கள் ஆக அவர்களுடைய வேர்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவர்களால் கிளைகளை மற்ற நாடுகளில் பரப்ப முடிகிறது ஆனால் அவர்களுடைய குழந்தைகளுடைய வேர்கள் அமெரிக்காவில் தான் இருக்கிறது. ஏனென்றால் அங்கு தான் அவர்கள் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால் அவர்களால் கிளைகளை தான் இந்தியாவிலோ வேரெங்கோ பரப்ப முடியும். வேரோடு பிடுங்கி எடுத்துக்கொண்டு போய் நட ஒரு கலாச்சாரத்திலிருந்து இன்னொரு கலாச்சாரத்திற்கு எடுத்து கொண்டு போனால் அது எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரும் என்று யோசிக்கவேண்டும் என்று சொல்லும்போது என்ன செய்கிறார்கள் இருவரும். கேளுங்கள் இனி.