Thenum Thinaimaavum

· Pustaka Digital Media
電子書籍
138
ページ
評価とレビューは確認済みではありません 詳細

この電子書籍について

தமிழ் நெஞ்சமே...! காலத்தால் அழியாத புகழடைய விரும்புகிறாயா? கவிதை பழகு! அதிலும் அழிக்க முடியாததொரு மொழி தாய்மொழியாகக் கிடைக்கப் பெற்ற உனது கவியார்வம் உன்னை மேலும் வழிகளை, ஊழிகளைக் கடந்து வாழவைக்குமென்பது உண்மை...

தாலாட்டுப் பாட்டிலிருந்து ஒப்பாரிப் பாட்டு வரை பெண்கள் கவிதையை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். தமிழ்ப் பெண்கள் கவிஞர்களாகவும் வாழ்கின்றனர். கவிதைகளாகவும் வாழ்கின்றனர். பெண்களின் புற அழகை மட்டும் முன்னிலைப் படுத்தி எழுதப்படும் கவிதைகள் சில நேரங்களில் விரும்பத்தக்கவைகளாகவும், பல நேரங்களில் வெறுக்கத்தக்கவைகளாகவும் அமைவதுண்டு. ஆனால், காதல், பண்பு, கடமை, மற்றும் இவையனைத்திலும் மிக உயர்ந்த தாய்மை போன்ற உயர் பண்புகளால் உள்ளம் நிறைக்கும் நன் மணிகளான பெரும்பான்மையானப் பெண்களையும், பிடிவாதம், பொன் பொருளாசை, பொறாமை போன்ற தாழ்வுகளால் வசை பாடுகளுக்குள்ளாகும் சிலரான பெண்களையும் என்றென்றும் கவிஞர்கள் கவிதைகளாக்கி இலக்கிய மேம்பாட்டிற்கு வழிவகுத்து வந்துள்ளனர். உலக இலக்கியங்களில் தமிழ்க்கவிஞர்களில் பலர் பெண்களாக அமைவது நடந்து வரும் சிறப்பமைப்பு.

பெண்களின் அழகு, சிறப்பியல்புகளைப் புகழ்வதிலும், பிடிவாதம், ஆதிக்க உணர்வு போன்றவற்றை இகழ்வதிலும் ஆண் கவிஞர்கள் போட்டி போடும் பொழுது... பெண்கள் மட்டும் வாளாவிருந்து விடலாமா! பெண்களின் பார்வையில் உலகம் மேலும் அழகாகத் தெரியும். இதற்கு அவர்களது தாய்மையும் மெல்லியல்புகளும் ஒரு காரணம். இதே இயல்புகளால், உலகின் கொடுமைகளும் அவர்களது பார்வையில் மிகைப் பட்டனவாகத் தோன்றுவதுண்டு.

"கவிதை புனைவதே பெண்மை இலக்கணம்" என்று நம்புபவன் நான். பெண்களே கவிஞர்களாகும்போது, பெண்மை இலக்கணம் மொழி இலக்கணத்துடன் இணைந்து, மெல்லுணர்வுகளால் தங்க முலாம் பூசப்பட்டு மிளிர்கிறது.

மொழி இலக்கணத்தை முறித்துப் போடும் புதுக்கவிதைகளாகட்டும்..., மொழி வளத்தை மேம்படுத்தும் மரபுக் கவிதைகளாகட்டும்... பண்பாட்டுச் சிதைவிற்கு வழிவகுக்காதக் கவிதைகளை வரவேற்பதே நல்ல கலைஞர்களின் இயல்பு.

பெண்மையின் உயர் நோக்கங்களிலிருந்து 'பாவை கண்ணதாசன்' தமது சூழல்களை ஆராய்ந்து பார்த்திருக்கிறார். வியப்படைந்தும் களித்திருக்கிறார். வேதனைப்பட்டும் நெகிழ்ந்திருக்கிறார். கற்பனை வளமும், எளிய நலமும் ததும்பும் புதுக்கவிதைகளாகவும்... கருத்தாழம் மொழிக்கட்டுப்பாடும் நிறைந்த மரபுக்கவிதைகளாகவும் படைத்திருக்கிறார். தமிழில் வெளியாகும் இலக்கிய இதழ்கள் இவரது படைப்புகளை அரங்கேற்றியிருப்பது இவரது மரபுக் கவிதைகளுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு. பல அரங்கங்களில் இவர் கவிதை பாடியிருப்பது இவரது புதுக்கவிதைகளுக்குக் கிடைத்த வெற்றி. தக்கத் திருத்தங்களுடன் தனது கவிதை நூல் வெளியாக வேண்டுமென்ற இவரது ஆர்வம் அனைத்துக் கவிஞர்களாலும் பின்பற்றப்பட வேண்டியதாகும்.

"தேனும் தினைமாவும்" என்று இத்தொகுதிக்குப் பெயர் சூட்டி மகிழ்கிறேன். தேனைச் சேகரிப்பதும் கடினமானது. தினை விளைவித்து இடித்து மாவாக்குவதும் கடினமானது. இரண்டும் வெவ்வேறு சுவை. இரண்டும் சேர்ந்தால் உடலுக்கு உறுதி. இத்தொகுதியில் மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் இவ்வகையில் சேர்ந்து கருத்துக்கு உறுதி தருகின்றன.

“மரபுக்கவிதை படைப்பதில் மேலும் முயன்று தனது ஈடுபாட்டையும், திறனையும் இவர் மேம்படுத்தி மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும்”

- “பல்கலைச் செல்வர்” ரமணன்

この電子書籍を評価する

ご感想をお聞かせください。

読書情報

スマートフォンとタブレット
AndroidiPad / iPhone 用の Google Play ブックス アプリをインストールしてください。このアプリがアカウントと自動的に同期するため、どこでもオンラインやオフラインで読むことができます。
ノートパソコンとデスクトップ パソコン
Google Play で購入したオーディブックは、パソコンのウェブブラウザで再生できます。
電子書籍リーダーなどのデバイス
Kobo 電子書籍リーダーなどの E Ink デバイスで読むには、ファイルをダウンロードしてデバイスに転送する必要があります。サポートされている電子書籍リーダーにファイルを転送する方法について詳しくは、ヘルプセンターをご覧ください。