வாழ்க்கை மிக சுவாரஸ்யமானது, ஏனெனில் நாம் நினைத்துப் பார்க்காத நேரத்தில் பல இனிய நினைவுகளையும் பல கொடிய வலிகளையும் கொடுத்துவிடும். அப்படிப்பட்ட வாழ்வில், ஒருவரை மட்டும் உலகம் என்று எண்ணி அன்பு பாராட்டும் போது, எந்த நேரத்திலும் அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுவார் என்பதை நாம் நினைப்பதில்லை. அப்பிரிவை அனுபவித்தவருக்கு மட்டுமே அதன் வலியை உணர முடியும். அனைத்து வலிகளையும் ஒன்றாகத் திரட்டி, சிவந்த கண்களோடு எழுதிய கவிதைகளை தேடி பயணிப்போம்.