Navadhaniya Samaiyal

· Pustaka Digital Media
ഇ-ബുക്ക്
116
പേജുകൾ
റേറ്റിംഗുകളും റിവ്യൂകളും പരിശോധിച്ചുറപ്പിച്ചതല്ല  കൂടുതലറിയുക

ഈ ഇ-ബുക്കിനെക്കുറിച്ച്

குளத்தை தொலைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலோடு வாழ்கிறோம். பீசா, பர்க்கர் செரிக்க தினமும் வாக்கிங் போகிறோம். இதுபோன்ற அவலங்களுக்கு காரணம் நாம் இயற்கையை விட்டு நீண்டதூரம் வந்திருப்பதுதான். ஆனால் சமீபகாலமாக நமது பாரம்பரிய உணவுகளான கம்பு, கேப்பை, கேழ்வரகு, சாமை, வரகரிசி, தினை, சோளம் ஆகியவை மீது நமக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது பாரம்பரிய உணவுகளின் அடிப்படையில் ஒரு சில சமையல்களை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன்.

இந்த உணவுகள் அனைத்தும் எந்தவித எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாது. நமது உடலுக்கு அதிக சக்தியையும் வலுவையும் கொடுக்கும். என்னுடைய நூலை நல்லமுறையில் வெளியிட முன் வந்திருக்கும் புஸ்தகா.காம் மேலாளர் அவர்களுக்கு நன்றி.

நான் சிறுவயதாக இருக்கும் போது என்னுடைய அம்மா தானிய உணவுகளை அடிக்கடி செய்து கொடுத்தார். அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் நான் கற்றுக் கொண்ட பாரம்பரிய உணவுகள் தான் இவை. நான் பொதிகை தொலைக்காட்சியில் இந்த பாரம்பரிய உணவுகளை செய்து காட்டியபோது வாசகர்கள் கடிதம் மூலமாக வாழ்த்தினர். அதன் உற்சாகத்தில் நான் மேலும் மேலும் நமது பாரம்பரிய உணவுகளை பல வகையான சமையல்களை செய்து பார்த்து உங்களுக்கு தந்திருக்கிறேன்.

நமது பாரம்பர்ய உணவை செய்து பாருங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்.

രചയിതാവിനെ കുറിച്ച്

சொந்தவூர் திண்டுக்கல். படிப்பு பி.காம். திண்டுக்கல்லில் தனியார் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். தூர்தர்சன் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவரது சிறப்பு அம்சம் நவதானியங்களின் அடிப்படையில் சமையல் செய்வது. "சுவையான சமையல்கள்" "நவதானிய சமையல்" ஆகியவை இவர் எழுதிய நூல்கள்.

ഈ ഇ-ബുക്ക് റേറ്റ് ചെയ്യുക

നിങ്ങളുടെ അഭിപ്രായം ഞങ്ങളെ അറിയിക്കുക.

വായനാ വിവരങ്ങൾ

സ്‌മാർട്ട്ഫോണുകളും ടാബ്‌ലെറ്റുകളും
Android, iPad/iPhone എന്നിവയ്ക്കായി Google Play ബുക്‌സ് ആപ്പ് ഇൻസ്‌റ്റാൾ ചെയ്യുക. ഇത് നിങ്ങളുടെ അക്കൗണ്ടുമായി സ്വയമേവ സമന്വയിപ്പിക്കപ്പെടുകയും, എവിടെ ആയിരുന്നാലും ഓൺലൈനിൽ അല്ലെങ്കിൽ ഓഫ്‌ലൈനിൽ വായിക്കാൻ നിങ്ങളെ അനുവദിക്കുകയും ചെയ്യുന്നു.
ലാപ്ടോപ്പുകളും കമ്പ്യൂട്ടറുകളും
Google Play-യിൽ നിന്ന് വാങ്ങിയിട്ടുള്ള ഓഡിയോ ബുക്കുകൾ കമ്പ്യൂട്ടറിന്‍റെ വെബ് ബ്രൗസർ ഉപയോഗിച്ചുകൊണ്ട് വായിക്കാവുന്നതാണ്.
ഇ-റീഡറുകളും മറ്റ് ഉപകരണങ്ങളും
Kobo ഇ-റീഡറുകൾ പോലുള്ള ഇ-ഇങ്ക് ഉപകരണങ്ങളിൽ വായിക്കാൻ ഒരു ഫയൽ ഡൗൺലോഡ് ചെയ്ത് അത് നിങ്ങളുടെ ഉപകരണത്തിലേക്ക് കൈമാറേണ്ടതുണ്ട്. പിന്തുണയുള്ള ഇ-റീഡറുകളിലേക്ക് ഫയലുകൾ കൈമാറാൻ, സഹായ കേന്ദ്രത്തിലുള്ള വിശദമായ നിർദ്ദേശങ്ങൾ ഫോളോ ചെയ്യുക.