Kanavu Kaanungal

· Pustaka Digital Media
ಇ-ಪುಸ್ತಕ
125
ಪುಟಗಳು
ರೇಟಿಂಗ್‌ಗಳು ಮತ್ತು ವಿಮರ್ಶೆಗಳನ್ನು ಪರಿಶೀಲಿಸಲಾಗಿಲ್ಲ  ಇನ್ನಷ್ಟು ತಿಳಿಯಿರಿ

ಈ ಇ-ಪುಸ್ತಕದ ಕುರಿತು

“நீங்கள் வாழ்க்கையில் ஒரு உன்னத நிலையினை அடைய விரும்பினால் உங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவு காணுங்கள். அந்தக் கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்” என்கிறார் நம் மதிப்பிற்குரிய ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள். ஆம். நம் எதிர்கால வாழ்க்கை வளமாக அமைய வேண்டுமானால், இந்த நிகழ்காலத்தில் அதைப்பற்றிய ஒரு இனிய கனவு நம் மனதில் நிழலாட வேண்டும். மனதில் நல்ல எண்ணம், வாக்கில் இனிய நற்சொற்கள். செயலில் நேர்மை, நாணயம், உழைப்பு இவற்றை அஸ்திவாரமாகக் கொண்டு எதிர்கால சாதனை பற்றிய கனவுக் கோட்டையை மனதில் கட்டினால், நம் கனவு நினைவாவது நிச்சயம்.

இக் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்று இருப்பவைகளில் சில பெற்றோர்களுக்கான ஆலோசனைக் கட்டுரைகள். என்னதான் பெற்றோர்களாகிய நாம் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் முன்னேறினாலும், நம் குழந்தையை நல்ல முறையில் வளர்க்காமல் போனால், எதிர்காலம் அவர்களுக்கு கேள்விக்குறியாவதுடன், நமக்கும் வாழ்க்கையின் இறுதிக் காலம் வேதனைக் காலமாகிவிடுகிறது. எனவே ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இந்தத் தொகுப்பில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் கடந்த ஒரு வருடத்தில் பிரபல மாத இதழ்களான மங்கையர்மலர், அவள் விகடன் சினேகிதி, பெண்மணி ஆகிய இதழ்களில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை.

என் எழுத்துலகப் பணியில் துணைக்கரம் கொடுத்து வரும் அன்புக் கணவர் வழக்கறிஞர் திரு.என்.தெய்வசிகாமணி அவர்களுக்கும், எழுத்தார்வத்தை இரத்தத்தில் ஊட்டிய அன்புத் தாயார் நாவலாசிரியை திருமதி லீலாகிருஷ்ணன் அவர்களுக்கும், எழுத்துப் பணியில் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வரும் அன்பு சகோதரி திருமதி அகிலா செந்தில் வேலனுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

நூலினைப் படிக்கும் சகோதர சகோதரிகள் இந்நூல் பற்றிய நிறை குறைகளை தெரியப்படுத்தினால் நூல் இயற்றிய அர்த்தத்தை முழுமையாக அடைவேன் என நினைக்கிறேன். வாசகர்களின் அன்புக் கடிதங்கள் எனது அடுத்தடுத்த நூல்களிலும் தொடரும். நன்றி வணக்கம்

அன்புடன்

கீதாதெய்வசிகாமணி

ಲೇಖಕರ ಕುರಿತು

Written morethan 25 books in Tamil in various subjects through Vanathi pathippagam, and Geetham puthagalayam. Written Devotional lyrics for morethan 15 cds.

CEO, GEETHAM MATRIMONIAL (Since 1997)

ಈ ಇ-ಪುಸ್ತಕಕ್ಕೆ ರೇಟಿಂಗ್ ನೀಡಿ

ನಿಮ್ಮ ಅಭಿಪ್ರಾಯವೇನು ಎಂದು ನಮಗೆ ತಿಳಿಸಿ.

ಮಾಹಿತಿ ಓದುವಿಕೆ

ಸ್ಮಾರ್ಟ್‌ಫೋನ್‌ಗಳು ಮತ್ತು ಟ್ಯಾಬ್ಲೆಟ್‌‌ಗಳು
Android ಮತ್ತು iPad/iPhone ಗೆ Google Play ಪುಸ್ತಕಗಳ ಆ್ಯಪ್ ಇನ್‌ಸ್ಟಾಲ್ ಮಾಡಿ. ಇದು ನಿಮ್ಮ ಖಾತೆಯನ್ನು ಸ್ವಯಂಚಾಲಿತವಾಗಿ ಸಿಂಕ್‌ ಮಾಡುತ್ತದೆ ಮತ್ತು ನೀವು ಎಲ್ಲೇ ಇರಿ ಆನ್‌ಲೈನ್‌ ಅಥವಾ ಆಫ್‌ಲೈನ್‌ನಲ್ಲಿ ಪುಸ್ತಕಗಳನ್ನು ಓದಲು ಅನುಮತಿಸುತ್ತದೆ.
ಲ್ಯಾಪ್‌ಟಾಪ್‌ಗಳು ಮತ್ತು ಕಂಪ್ಯೂಟರ್‌ಗಳು
Google Play ನಲ್ಲಿ ಖರೀದಿಸಿದ ಆಡಿಯೋಬುಕ್‌ಗಳನ್ನು ನಿಮ್ಮ ವೆಬ್‌ ಬ್ರೌಸರ್‌ನ ಕಂಪ್ಯೂಟರ್‌ನ ಲ್ಲಿ ಆಲಿಸಬಹುದು.
eReaders ಮತ್ತು ಇತರ ಸಾಧನಗಳು
Kobo ಇ-ರೀಡರ್‌ಗಳಂತಹ ಇ-ಇಂಕ್ ಸಾಧನಗಳ ಕುರಿತು ಓದಲು, ನೀವು ಫೈಲ್ ಅನ್ನು ಡೌನ್‌ಲೋಡ್ ಮಾಡಬೇಕಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಅದನ್ನು ನಿಮ್ಮ ಸಾಧನಕ್ಕೆ ವರ್ಗಾಯಿಸಬೇಕು. ಫೈಲ್‌ಗಳು ಮತ್ತು ಬೆಂಬಲಿತ ಇ-ರೀಡರ್‌ಗಳನ್ನು ವರ್ಗಾವಣೆ ಮಾಡಲು ವಿವರವಾದ ಸಹಾಯ ಕೇಂದ್ರ ಸೂಚನೆಗಳನ್ನು ಅನುಸರಿಸಿ.