Gramathu Virunthu Part 1

· Pustaka Digital Media
5.0
1 รีวิว
eBook
62
หน้า
คะแนนและรีวิวไม่ได้รับการตรวจสอบยืนยัน  ดูข้อมูลเพิ่มเติม

เกี่ยวกับ eBook เล่มนี้

சென்னை போன்ற நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராமப்புறங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதையும் தாண்டி, கிராமப்புறங்களுக்கே சொந்தமான உணவுப் பண்டங்களை சாப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு இன்னும் அரிது. நகரங்களில் வாழும் பலரும் கிராமப்புறங்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும்கூட தங்களின் சொந்த ஊரோடு தொடர்பு இல்லாமலேயே வாழும் தலைமுறைகள் உருவாகிவிட்டன. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பொங்கல் திருநாள்கூட குக்கர் பொங்கலால் கொண்டாடப்படுகிறது. நகரில் தொடங்கிய Fast Food எனப்படும் துரித உணவு கலாச்சாரம் சிறு நகரங்களையும் தொற்றிக்கொண்ட இந்த தருணத்தில் கிராமப்புற உணவுகளுக்கான ஏக்கம் நம்மில் பலருக்கும் கண்டிப்பாக இருக்கும். இந்த குறையைப் போக்கும் நோக்கத்தில் உருவானதுதான் கிராமத்து விருந்து. நமது தமிழக கிராமங்களுக்கே சொந்தமான மண் வாசனையுடன் கூடிய உணவுப் பண்டங்களை சமைப்பது பற்றி சொல்ல சரியான ஆள் யாரென்று யோசித்தபோது, இன்று திரையுலகில் கணீர் குரல் பாடகியாகவும், நடிகையாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நாட்டுப்புற நாயகி பரவை முனியம்மா சரியான தேர்வாகத் தோன்றியது. நான் இயக்கி, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் 'கிராமத்து விருந்து' என்கிற பெயரில் பரவை முனியம்மா சமைத்துக் காட்டிய வித்தியாசமான கிராமத்து உணவுப் பண்டங்களின் சமையல் செய்முறைகளை இங்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம். படித்துப் பாருங்கள். சமைத்துப் பாருங்கள். மண் வாசனையுடன் சுவைத்துப் பாருங்கள்.

การให้คะแนนและรีวิว

5.0
1 รีวิว

เกี่ยวกับผู้แต่ง

சென்னை பல்கலைக்கழகத்தின் பாரதி மகளிர் கல்லூரியில் B.Com பட்டப்படிப்பை முடித்த திருமதி. விஜயலட்சுமி ரமேஷ், ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவின் செயலராக பணியாற்றியவர். பிறகு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றதோடு, ‘சன் டிவி’ மற்றும் ‘கலைஞர் டிவி’ ஆகிய சேனல்களில் புகழ்பெற்ற ‘சக்தி மசாலா சமையல்’ நிகழ்ச்சியை தொடர்ந்து 1000 வாரங்கள் இயக்கிய ஒரே இந்திய இயக்குநர் என்கிற பெருமை திருமதி. விஜயலட்சுமி ரமேஷ் அவர்களுக்கு உண்டு.

அவர் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கி வந்த, அந்த புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியின் சுவையான பல்வேறு பகுதிகளை இப்போது நீங்கள் மின்னூல் வடிவமாக படிக்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறீர்கள்.

ให้คะแนน eBook นี้

แสดงความเห็นของคุณให้เรารับรู้

ข้อมูลในการอ่าน

สมาร์ทโฟนและแท็บเล็ต
ติดตั้งแอป Google Play Books สำหรับ Android และ iPad/iPhone แอปจะซิงค์โดยอัตโนมัติกับบัญชีของคุณ และช่วยให้คุณอ่านแบบออนไลน์หรือออฟไลน์ได้ทุกที่
แล็ปท็อปและคอมพิวเตอร์
คุณฟังหนังสือเสียงที่ซื้อจาก Google Play โดยใช้เว็บเบราว์เซอร์ในคอมพิวเตอร์ได้
eReader และอุปกรณ์อื่นๆ
หากต้องการอ่านบนอุปกรณ์ e-ink เช่น Kobo eReader คุณจะต้องดาวน์โหลดและโอนไฟล์ไปยังอุปกรณ์ของคุณ โปรดทำตามวิธีการอย่างละเอียดในศูนย์ช่วยเหลือเพื่อโอนไฟล์ไปยัง eReader ที่รองรับ