இப்போது கேரளாவிலிருந்து வரும் ஆறு பைக்கர்கள் சஞ்சீவியுடன் கூட்டணி சேர்கின்றனர். கேரள பைக்கர்களில் ஒரு பெண் சஞ்சீவியை கண் மூடிதனமாக காதலிக்கிறாள். போபால், ஜான்சி, ஆக்ரா, ந்யூடெல்லி, தாண்டி லடாக்கின் எல்லையில் கால் வைக்கும் போது சஞ்சீவி அண்ட் கோ அதளபாதாளத்தில் பைக்குடன் தள்ளி விடப்பட்டு வன்கொலை செய்யப்படுகின்றனர். சஞ்சீவியின் காதலி அபர்ணாவின் வேண்டுகோளின் படி டியாரா ராஜ்குமார் சஞ்சீவியின் மரணத்தை பற்றி துப்பறிய லடாக் செல்கிறான். டியாராவின் துப்பறிதல் ஆரம்பிக்கிறது.