Ajaya Book II

· Manjul Publishing
4,0
1 отзыв
Электронная книга
604
Количество страниц
Оценки и отзывы не проверены. Подробнее…

Об электронной книге

நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் 'கௌரவன்' துரியோதனன். இந்த இரண்டாம் பாகத்தில் - போர் மேகங்கள் வெகுவேகமாகச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய விவாதங்கள் சூடாக நடைபெறுகின்றன. அதிகாரப் பசி கொண்ட ஆண்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கப் போகின்ற ஒரு போருக்குத் தயாராகின்றனர். பெண்களும் பிராமணர்களும் தங்கள் கண்முன்னால் கட்டவிழ்ந்து கொண்டிருக்கின்ற பேரழிவைப் பெரும் அச்சத்துடனும் கையாலாகாத்தனத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பேராசைமிக்க வணிகர்களும் சூழ்ச்சிகரமான புரோகிதர்களும் கழுகுகள்போலக் காத்துக் கொண்டிருக்கின்றனர். தன் பங்குக்கு ஓர் 'அவதாரமும்' சளைக்காமல் சதி செய்து கொண்டே இருக்கிறது. இருண்ட கலிகாலம் உதயமாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையேயும், கௌரவத்திற்கும் அவமானத்திற்கும் இடையேயும், உயிர்பிழைத்திருத்தலுக்கும் சாவுக்கும் இடையேயும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் . . .

Оценки и отзывы

4,0
1 отзыв

Об авторе

கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்த திருப்பூணித்துறை எனும் பழமையான சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஆனந்த் நீலகண்டன். தேவைக்கு அதிகமாகவே கோவில்கள் இருந்த ஒரு கிராமத்தில் அவர் வளர்ந்து வந்ததால், இந்தியப் புராணங்களும் இதிகாசங்களும் அவருக்கு பிரமிப்பூட்டியதில் வியப்பேதும் இல்லை. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இந்தியக் காவியங்களின் எதிர்நாயகர்கள்தாம் அவரைப் பெரிதும் கவர்ந்தனர். அவர்களுடைய மாயாஜால உலகைப் பற்றி அவர் வியந்தார். நம்முடைய இதிகாசங்களில் வருகின்ற, அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டவர்களின் கதைகளை எடுத்துரைக்க வேண்டும் என்ற தணியாத தாகம் அவரைத் தூங்கவிடவில்லை. நாம் நம்முடைய இதிகாசங்கள் குறித்து அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்காமல் அவற்றை மௌனமாக ஏற்றுக் கொண்ட மனப்போக்கின் காரணமாக, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ராவணன், துரியோதனன் போன்ற உண்மையான கதாநாயகர்களை, ஆனந்த் நீலகண்டன் முறையே தன்னுடைய ‘அசுரன்’, ‘கௌரவன்’ ஆகிய நாவல்கள் மூலம் உயிர்த்தெழ வைத்துள்ளார்.

Оцените электронную книгу

Поделитесь с нами своим мнением.

Где читать книги

Смартфоны и планшеты
Установите приложение Google Play Книги для Android или iPad/iPhone. Оно синхронизируется с вашим аккаунтом автоматически, и вы сможете читать любимые книги онлайн и офлайн где угодно.
Ноутбуки и настольные компьютеры
Слушайте аудиокниги из Google Play в веб-браузере на компьютере.
Устройства для чтения книг
Чтобы открыть книгу на таком устройстве для чтения, как Kobo, скачайте файл и добавьте его на устройство. Подробные инструкции можно найти в Справочном центре.