பிரையன் டிரேசி வெற்றி நூலகம்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள 'நேர நிர்வாகம்' எனும் இந்தச் சுருக்கமான வழிகாட்டி நூல், நீங்கள் தினமும் கூடுதலாக இரண்டு மணிநேரத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 உத்திகளை உள்ளடக்கியுள்ளது. பிரையன் டிரேசி உட்பட, வெற்றியாளர்கள் பலரும் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற உத்திகள் இவை.