சிறு வயது முதலே தந்தையின் பிடிவாதத்தில், அவரின் விருப்பத்துக்கு இணங்கி அனைத்தையும் செய்யும் முகிலன், தன் திருமணமாவது அதில் இருந்து மாறுபட்டு, அவரது விருப்பத்துக்கு இல்லாமல், தன் விருப்பத்துக்கு அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றான். ஆனால், திருமண விஷயத்திலும் அவனது தந்தையின் பிடிவாதமே வெல்ல, அவரின் கோபத்துக்கு கட்டுப்பட்டு, தாயின் கெஞ்சலுக்கு இணங்கி வளர்மதியை திருமணம் செய்துகொள்ள, அவளைத் திருமணம் செய்துகொண்ட பிறகே அவளது வயதைப் பற்றி அறிந்து கொள்கிறான்.</p> <p>அவளுமே தன்னைப்போல் பெற்றவர்களின் சொல்லுக்கிணங்கி திருமணம் செய்து கொண்டுள்ளாள் என்பது புரிய, அவளுக்கு உலகம் புரியவந்த பிறகே அவளுடனான வாழ்க்கையை துவங்குவது என்ற முடிவில் இருக்கின்றான்.
அதை செயல்படுத்துகையில், அவரது பெற்றவரிடமிருந்து கிளம்பும் எதிர்ப்பு, வளர்மதியின் அறியாமை, இவை அனைத்தையும் எப்படி கடந்து அவளுடனான தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான் என்பதை அறிந்துகொள்ள இந்த ஒலிப் புத்தகத்தைப் படியுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.<br> கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும். புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தகா’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் [email protected] என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அகில இந்திய வானொலியிலும் பகுதி நேர அறிவிப்பாளராக இருக்கும் இவர்,முன்னணி நாளிதழ்களிலும்,மா