"ஷிர்டி பாபாவும் மதங்கடந்து எல்லா மக்களையும் கவர்ந்த ஒரு மகான். இந்து முஸ்லீம் ஒற்றுமை பாரதத்தில் மிக அதிகமாகத் தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில், ஷிர்டி பாபாவின் வரலாறு இறையன்பர்கள் படிப்பதற்கும் பாராயணம் செய்வதற்கும் ஏற்றது. நதிகள் அனைத்தும் கடலில் கலக்கிற மாதிரி, எல்லா மதங்களும் பரம்பொருள் என்ற சமுத்திரத்தில்தான் கலக்கின்றன என்ற பரமஹம்சர் வாசகத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நூலைப் பயில்பவர்கள் இம்மைப் பயன்கள், மறுமைப் பயன்கள் இரண்டையும் பெறவும், மதங்களில் எல்லாம் உயர்ந்த மதம் அன்புதான் என்ற உண்மையை உணரவும், எல்லோர் மனத்திலும் சாந்தியும் சமாதானமும் நல்லிணக்கமும் நிலவவும் ஷிர்டி பாபாவின் அருள் துணைநிற்கட்டும்."
Skönlitteratur och litteratur