ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்நாட்டின் விவசாயம் தான் கடவுள் என்ற முதலாளியின் ஒரே தொழிலாளி விவசாயி. சங்க இலக்கியங்களில் "வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர ,என்று உழவின் மேன்மையைப் பற்றி ஒளவைப்பிராட்டியும் 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார்கள். அப்படிப்பட்ட உழவுத்தொழில் புரியும் நம் விவசாயிகளின் நிலை தற்ப்போது என்ன? இப்புதினத்தில் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்கள் சந்திக்கும் பிரட்சனைகளையும், அவர்களின் உழைப்பை சுரண்டும் நிலச்சுவன்தார்களையும் அந்த ஆண்டைகள் தங்கள் பாதுகாப்பிற்க்காக எற்ப்படுத்தி வைத்திருக்கும் மதம், சாதி என்ற சாக்கடைகளையும் அழகாக பிம்பப்படுத்தியிருக்கிறார்.
Ilukirjandus ja kirjandus