"இந்த நாவலின் நாயகி நித்யா, நாயகன் நிகில். இருவரும் காதலர்கள். காட்சி 1 இருவரும் ஆக்ரா சென்று பெளர்ணமி வெளிச்சத்தில் தாஜ்மஹாலைப் பார்க்கிறார்கள். பால் போன்ற தாஜ்மஹாலை இருவரும் ரசித்துக் கொண்டிருக்கும்போதே நித்யாவின் முகம் மாறுகிறது. நிகில் அவளுடைய முகமாற்றத்துக்கு காரணம் கேட்க, அவள் குரல் நடுக்கத்தோடு பால் போன்ற வெள்ளை தாஜ்மஹால் தனக்கு சிவப்பு நிறமாகத் தெரிவதாக சொல்கிறாள்...... காட்சி 2 நித்யா ஒரு ஹோட்டலில் ரிசப்னிஷ்டாக வேலை பார்ப்பதால் இன்றைய தினம் வேலைக்குப் போன நித்யாவுக்கு ஒரு கடிதம் வந்து இருப்பதாக உடன் வேலை பார்க்கும் ஷ்யாமா சொல்லி கவர் ஒன்றைத் தருகிறாள். நித்யா அந்த கவரை வாங்கிப் பார்க்கிறாள் To அட்ரஸில் அவள் பெயரும், ஹோட்டலின் முகவரியும் தெரிய From அட்ரஸில் யார் அனுப்பியது என்று பார்க்கிறாள். ஃப்ரம் அட்ரஸில் சிவப்பு மையால் எழுதப்பட்ட எழுத்துக்கள் தெரிகின்றன.நித்யா அட்ரஸை பார்த்துவிட்டு அரண்டு போகிறாள். சிவப்பு தாஜ்மஹாலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்புகிறாள் நாவலை முழுவதுமாக கேளுங்கள். நித்யாவுக்கு மட்டுமல்ல நமக்கும் குழப்பம் தான். குழப்பங்கள் தீர, கேட்கலாமா சிவப்பு தாஜ்மஹால்."