"இந்த நாவலின் தலைப்பு குழப்பமாய் இருப்பது போலவே கதையில் வரும் ஆரம்பகால சம்பவங்கள் புதிராக இருந்து போகப் போக ஒரு தெளிவான நிலைமையை உங்களுக்குள் ஏற்படுத்தும். இது ஒரு குடும்ப க்ரைம் த்ரில்லர். ஒரு அழகானப் பெண்ணுக்கு எதிர்பாராத கோர விபத்து ஒன்று நிகழ்கிறது. அது அவள் வாழ்க்கையை திசை திருப்பிகிறது. இந்த நிலையில், அவள் காதலித்த இளைஞன் தூக்குத் தண்டனை கைதி என்று அறிந்தும் விடாப்பிடியாய் தொடர்ந்து காதலிப்பதும், அவனை தண்டனையின் பிடியிலிருந்து சட்டரீதியாக தப்ப வைக்க முயல்கிறாள். ஆனால் அவள் சந்திக்கும் நபர்களில் சிலர் அதை கடினமாக்குகிறார்கள், சிலர் இலகுவாக்குகிறார்கள். விறுவிறுப்பான சம்பவங்களோடு சென்னையில் ஆரம்பித்து கௌகாத்தியில் அங்கே யாருமே எதிர்பார்க்க முடியாத திருப்பத்தோடு நிறைவடைகிறது இந்த த்ரில்லர்."