நளன் தமயந்தி கதையைப் பேசும் செய்யுள் நூல்கள் தமிழில் இரண்டு உண்டு.ஒன்று அதிவீரராம பாண்டியன் எழுதிய நைடதம். இன்னொன்று புகழேந்திப் புலவரின் நளவெண்பா. திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய நளசரிதம் அதே கதையை உரைநடையில் இன்னும் விரிவாகப் பேசுகிறது. திடுக்கிட வைக்கும் திருப்பங்களோடு வளரும் இந்த நெஞ்சை உருக்கும் காதல் கதைக்கு இலக்கியச் சிறப்போடு ஆன்மிகச் சிறப்பும் உண்டு. நள சரிதம் கேட்பவர்கள் ஏழரை நாட்டுச் சனியின் பாதிப்பிலிருந்து விடுபடுவார்கள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.