‘மயில் கழுத்து’ மனித உணர்வுகள், தத்துவ சிந்தனைகள் மற்றும் உறவுகளின் சிக்கலான தன்மைகளை ஆராய்கிறது. பாலசுப்ரமணியனும் ராமனும் வாழ்க்கை, இலக்கியம் மற்றும் மனித இயல்பு குறித்து ஆழமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். கலாச்சாரம் மற்றும் அறிவுசார் விவாதங்களின் பின்னணியில் விரியும் இந்தக் கதையில், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகள், அதை அவர்கள் எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள் என அவியலாக பரிமாறுகிறார் எழுத்தாளர். சந்திரா போன்ற ஆளுமைகள் அவர்களின் வாழ்க்கையில் எழுப்பும் கேள்விகள், ஈர்ப்பு, அதிகாரம் மற்றும் மனதின் குழப்பங்கள் குறித்த சிந்தனைகளை எழுப்புகின்றன. ஒவ்வொரு உரையாடலுக்கும் ஆழமான அர்த்தம் உள்ள ஒரு உலகத்திற்குள் வாசகர்களை அழைத்துச் செல்கிறது இந்தக் கதை.