"திரு. சாண்டில்யன் அவர்கள் எழுதிய ஜலதீபம் என்ற சரித்திர நூல் 1700களின் மராட்டிய பின்னணியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த நூலாகும். மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நூல் ,ஆசிரியரின் தனித்துவமிக்க நடையிலான கதை. தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான். பானுதேவி, மஞ்சு, கேதரின் மற்றும் எமிலி ஆகிய நான்கு பெண்களுடனான கதாநாயகனின் காதல் தொடர்புகள் மறக்கமுடியாதவை. மேலும் ப்ரம்மேந்திர சுவாமிகள் பேஷ்வாபாலாஜி விஸ்வநாத் போன்ற சுவையூட்டும் கதாபாத்திரங்களும் இக்கதையில் உள்ளது. போர்க்கள காட்சிகள் அப்பழுக்கற்றனவாகும்.இது ஒரு மிகச்சிறந்த சரித்திர நூலாகும்."
Szórakoztató és szépirodalom