Dhik Dhik Kathaigal - Audio Book

Pustaka Digital Media
অডিওবুক
2 ঘণ্টা 22 মিনিট
সংক্ষিপ্ত নয়
রেটিং ও রিভিউ যাচাই করা হয়নি  আরও জানুন
14 মিনিট সময়ের নমুনা পেতে চান? যেকোনও সময় শুনুন, এমনকি অফলাইনে থাকলেও। 
জুড়ুন

এই অডিওবুকের বিষয়ে

திக் திக் கதைகள் அமரர் ரா கி ரங்கராஜன் அவர்களால் மயிர்கூச்செறியும் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறு கதைகளின் தொகுப்பு இதிலிருந்து 10 மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து ஒலிப்புத்தகமாக வெளிவந்துள்ளது இந்தக் கதைகள் கடைசி வினாடி வரை உங்களின் இதயத் துடிப்பை அதிகரிக்க செய்யும் சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்தவை. ஆங்கிலத்தில் நாம் ஜெஃப்ரி ஆர்ச்சர் மாபசான் ஓஹென்றி போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் படித்து சிலாகித்துள்ளோம் அவர்கள் கடைசி வரிகளில் ஒரு திருப்பம் வைத்து நம்மை பிரம்மிக்க வைப்பார்கள் அந்த வகையில் ரங்கராஜனின் கதை முடிவுகள் நாம் எதிர் பார்க்காத அதிர்ச்சியான திருப்பங்களைக் கொண்டது. பாம்பே கண்ணன் குரலில் வந்துள்ள இந்தக் கதைகள் காட்சிகளாக நம் கண் முன்னே விரிவது உறுதி திக் திக் என்ற இதயத் துடிப்புடன் கேட்டு மகிழுங்கள்.

লেখক সম্পর্কে

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

এই অডিওবুকের রেটিং দিন

আপনার মতামত জানান।

কীভাবে শুনবেন

স্মার্টফোন এবং ট্যাবলেট
Android এবং iPad/iPhone এর জন্য Google Play বই অ্যাপ ইনস্টল করুন। এটি আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক সিঙ্ক হয় ও আপনি অনলাইন বা অফলাইন যাই থাকুন না কেন আপনাকে পড়তে দেয়।
ল্যাপটপ ও কম্পিউটার
আপনি আপনার কম্পিউটারের ওয়েব ব্রাউজারের ব্যবহার করে Google Play তে কেনা বইগুলি পড়তে পারেন।