‘டெய்லி முத்ராஸ்’ (யோகா) செயலி, யோக முத்திரைகள் மூலம் உங்கள் உடல், மனம், ஆன்மீக வாழ்வை மேம்படுத்தும் ஓர் இயற்கை மருத்துவ செயலியாகும்.
செயலியின் அம்சங்கள்:• சிறந்த 50-க்கும் மேற்பட்ட யோக முத்திரைகள், அவற்றின் பயன்கள், சிறப்புகள், புகைப்படங்களுடன் கூடிய செய்முறைகள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன.
• இம்முத்திரைகள் கண்கள், காதுகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற உடல் உறுப்புகள் மற்றும் நன்மைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
• தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
• உங்கள் வயது, பாலினம் மற்றும் தொழில் அடிப்படையில் முத்திரைகளைப் பரிந்துரைக்கும் வசதியும் உண்டு.
• முதல் முறை பயன்படுத்தும்போது குறியீடுகளைப் புரிந்துகொள்ள வழிகாட்டி காண்பிக்கப்படும்.
• நோய் குணமாக அல்லது நீண்ட ஆரோக்கியம் பெற அல்லது மன அமைதி பெற, என உங்கள் தேவைக்கு ஏற்ற முத்திரைகளை வழிகாட்டும்.
• முத்திரை பயிற்சிக்கு மனதை பக்குவப்படுத்தும் தியான இசையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
• குறிப்பிட்ட நேரங்களில் பயிற்சி செய்ய அலாரம் வசதி உண்டு.
• பிடித்த முத்திரைகளை மீண்டும் பயிற்சி செய்ய சேமிக்கும் (Bookmark) வசதி உள்ளது.
• எழுத்து வடிவத்தை பெரிதாக்கவும், சிறியதாக்கவும் முடியும்.
• முத்திரையின் பெயர், உடல் பாகங்கள், பயன்கள் கொண்டு தேடும் வசதி உள்ளது.
• இந்த செயலி பயன்படுத்துவதற்கு இலவசம். ஆனால், சில வசதிகள் கட்டணத்திற்கு உட்பட்டது. அதாவது சந்தாவை (பிரீமியம்) அடிப்படையாக கொண்டுள்ளது.
• முக்கியமாக, இணைய இணைப்பு இல்லாமலும் செயல்படும்.
• உடல், மன ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கை முறையில் மேம்படுத்துவதே இச்செயலியின் முக்கிய நோக்கமாகும்.
முத்திரைகளைப் பற்றி:முத்திரை என்பது ஒரு வடமொழிச் சொல். கைகளால் செய்யப்படும் சைகையைக் குறிக்கும். 'முத்தி' (பேரின்பம்), 'திரை' (அளித்தல்) - உடல் சார்ந்த, மனம் சார்ந்த குறைகளை நீக்கி பேரின்பம் தருவதாலேயே இப்பெயர் வந்தது. இது முதன் முதலில் இந்துமதம் மற்றும் புத்த மதத்தினரால் தோற்றுவிக்கப்பட்டது. அக்காலத்திலிருந்தே முத்திரை என்பது வழக்கத்தில் இருந்துள்ளது. இதற்கு இலக்கியச் சான்றுகள் பல உள்ளன.
"மந்திர சாஸ்த்திரம்" போன்ற வடமொழி நூல்களிலும், பரதநாட்டியம், மோகினி நடனம், வர்மக்கலை போன்ற பாரம்பரிய கலைகளிலும் முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காரணம், நமது விரல் நுனிகளுக்கு முழு உடலையும் இயக்கும் ஆற்றல் உண்டு.
முத்திரை செயல்படும் விதம்:பஞ்ச பூதங்களே (நெருப்பு, வாயு, ஆகாயம், பூமி, நீர்) முத்திரைகளின் அடிப்படை. சாஸ்த்திரப்படி, ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்துடன் தொடர்பு கொண்டது.
• பெருவிரல் – நெருப்பு
• ஆள்காட்டி விரல் – வாயு
• நடுவிரல் – ஆகாயம்
• மோதிர விரல் – பூமி
• சிறுவிரல் – நீர்
பஞ்ச பூதங்களின் சமச்சீரற்ற நிலையே நோய்களுக்குக் காரணம். குறைவான சக்தி கொண்ட பூதத்தின் விரலுடன் பெருவிரல் சேரும்போது சமநிலை ஏற்படுகிறது. விரல் நுனிகள் தொடும்போது உருவாகும் மின்காந்த சக்தி, உடல், மனதை மேம்படுத்தி புத்துணர்ச்சி அளிக்கிறது. முத்திரை உடல், மன ஆரோக்கியத்துடன் ஆன்மிக அனுபவத்தையும் தரும் அற்புத மருந்தாகும்.
பயிற்சி முறை:பொருத்தமான முத்திரையைத் தேர்ந்தெடுத்து, முறையாக அமர்ந்து, சரியான தொடுதலோடு, ஆழந்த சுவாசத்தில் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் 5 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும். முத்திரை பயிற்சி செய்வது மட்டுமல்லாமல், உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.
முத்திரைகளின் சிறப்பு:• முத்திரைகள் என்பது யோகா, தியானம், நடனத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
• ஒருமுகத்தன்மையை மேம்படுத்தி, இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவுகின்றன.
• இப்பயிற்சிக்கு பணம் அல்லது சிறப்புத் திறமை எதுவும் தேவையில்லை. சிறிதளவு பொறுமை மட்டும் போதும்.
• மன அழுத்தத்தைப் போக்கி, ஆன்ம அமைதியையும், தெளிந்த மனநிலையையும் அளிக்கின்றன.
• தினசரி முத்திரை பயிற்சி மற்றும் தியானம் என்பது உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒன்று.
இது பற்றிய உங்களது கருத்துகள், எதிர்பார்ப்புகள் ஏதேனும் இருப்பின், தயவுசெய்து
[email protected] என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். இந்த செயலியை தயவுசெய்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிரவும்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறோம்!